17 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - மத்திய அரசு அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


இந்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது, "நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் மாதம் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி முடிவடைகிறது. 

இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 பணி நாட்கள் இருக்கும். அமுத கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் விவாதங்கள் இருக்கும் என்றும், ஆக்கப்பூர்வ விவாதங்களும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் முதல் நாள், உறுப்பினர்களின் மறைவை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், பெரிய அளவில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliment winter seassion meeting centrel government allounce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->