நடுவானில் விமான கதவை திறக்க முயன்ற போதை ஆசாமி..! - Seithipunal
Seithipunal


நடுவானில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் நேற்று இண்டிகோ விமானம் பெங்களூரு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது விமானத்தில் பயணம் செய்த 40 வயதுடைய நபர் காலை 7.56 மணி அளவில் விமானத்தின் அவசரக் கதவை திறக்க முயன்றுள்ளார். மேலும் அந்தப் பயணி குடிபோதையில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார்.

இதைப்பார்த்த விமான பணியாளர்கள், இது குறித்து கேப்டனிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவசர கதவை திறக்க முயன்ற பயணி எச்சரிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விமானம் பெங்களூரு வந்தடைந்ததும், குடிபோதையில் விமானத்தின் அவசரக் கதவை திறக்க முயன்ற பயணியை சி ஐ எஸ் எப் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Passenger arrested for trying to open emergency door in plane


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->