சென்னை விமான நிலையத்தில் நடந்து வந்த பயணி.! நொடியில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் நடந்து வந்த பயணி.! நொடியில்  நடந்த கொடூரம்.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சாலமோன் மாட்டின் லூதர் என்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டில், தனியார் நிறுவனம் ஒன்றில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். 

இவர், தனது சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக, ஏர் இந்தியா விமானத்தின் மூலம் மும்பைக்கு வந்து அங்கிருந்து நேற்று மதியம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து ஏரோ பிரிட்ஜ் வழியாக, தரை தளத்துக்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது அவர் திடீரென மயங்கி கீழே சரிந்து விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விமான நிலைய மருத்துவ குழுவினருடன் விரைந்து சென்று அவரை பரிசோதித்தனர். 

அதில், அவர் திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. உடனே இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை விமான நிலைய போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சாலமோன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passenger died in chennai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->