மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தியாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக வழங்கப்படும் மரியாதைகளின் படிநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இந்த பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன: அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன். இந்த விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.

இந்த நிலையில் கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலாமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pathma pooshan award to actor vijayakant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->