டெல்லியில் பரபரப்பு : 5 ஆம் வகுப்பு மாணவிக்கு கூட்டு பாலியல் தொல்லை அளித்த பியூன் - போக்சோவில் கைது.!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்பூரைச் சேர்ந்த அஜய் என்பவர் டெல்லி மாநிலத்தில் காஜியாபாத் நகரில் உள்ள டெல்லி மாநகராட்சியின் முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் கடந்த பத்து ஆண்டுகளாக பியூனாக பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த 14ம் தேதி, பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவியை, பள்ளியிலிருந்து மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று போதைப்பொருளால் அவரை மயக்கமடையச் செய்து, பின்னர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால், சிறுமி பள்ளிக்குச் செல்லாமல், தனது இறுதித் தேர்வையும் புறக்கணித்துவிட்டார். இந்நிலையில், மாணவியின் ஆசிரியை, சிறுமியின் சகோதரரைத் தொடர்பு கொண்டு சிறுமி இறுதித் தேர்வுக்கு வராதது குறித்து விசாரணை செய்த போதுதான் இந்தச் சம்பவம் தெரியவந்தது.

இதையறிந்த பள்ளி நிர்வாகம் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பியூன் அஜய் குமாரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரின் கூட்டாளிகளை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- "எம்சிடி பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் பள்ளியின் பியூன் என்பதால் இது ஒரு தீவிரமான விஷயம். 

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை மற்றும் எம்சிடிக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் கூட பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் என்ன செய்வது?" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

peon arrested for sexuall harassment case to 5th class student in delhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->