என்னை சந்திக்க வரும் மக்கள் ஆதார் அட்டையை கொண்டு வரவும் - கங்கனா ரனாவத்! - Seithipunal
Seithipunal


பாஜக எம்.பி யும் நடிகையுமான கங்கனா ரனாவத் என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அனைவரும் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட நடிகை கங்கனா ரணாவத் 74, 775 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்பி கங்கனா கலந்து கொண்டார். மக்களிடையே பேசிய எம்.பி கங்கனா, நான் மண்டி தொகுதியில் இருக்கும் நாட்களில் இந்த பஞ்சாயத்து பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வழியாக மக்களின் குறைகளை கேட்டிருந்து அவற்றை தீர்க்க முயற்சி செய்வேன்.

மக்களுக்காக அற்பணிக்க விரும்புகிறேன். இந்த இடத்தில் என் தொகுதி மக்கள் தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை. தொகுதி மக்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்தால் நான் அவர்கள் என் தொகுதி மக்கள் என்பதை என்னால் உறுதி செய்து கொள்ள முடியும்.

அதனால் என்னை சந்திக்க வரும் அனைவரும் ஆதார் அட்டைகளை கொண்டு வர வேண்டும். குறைகளை பேப்பரில் எழுதிக் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வைக்க முடியும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People who come to meet me bring Aadhaar card Kangana Ranaut


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->