மக்கள் நல பணியாளர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும்! நவ. 22க்கு விசாரணை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


அரசு மாற்றத்தினால் பதவியை பறிப்பது பணியாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை அல்லவா?

திமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். சுமார் 13,500 மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் பணியாற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வின் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசின் புதிய கொள்கை முடிவின்படி பணியில் சேராமல் இருக்கும் மக்கள் நல பணியாளர்களுக்கு பணியில் சேர கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் புதிய கொள்கை முடிவானது வரும் காலங்களில் தொடருமா? மக்கள் நலப் பணியாளர்கள் பணிக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது பணியில் சேராத மக்கள் நல பணியாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசின் புதிய கொள்கையின்படி 489 பேர் பணியில் சேரவில்லை. மற்ற பணியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார். இவர்கள் பணியை ஏன் ஏற்கவில்லை என்பது குறித்தும் பணிக்கான ஊதியம் மற்றும் ஊதிய வேறுபாடுகள் குறித்தும் விலக்கி ஒரு பட்டியல் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணி பாதுகாப்பு இல்லை என 489 பேர் பணியில் சேரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு நீதிபதிகள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நிலையான திட்டமா? எதிர்காலத்திலும் இத்திட்டம் நிலையாக இருக்குமா? என அரசு தரப்பிற்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் இது மத்திய அரசின் திட்டம். தற்பொழுது நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் எதிர்காலத்திலும் தொடர்வது என்பது மத்திய அரசின் கையில் தான் உள்ளது. தற்போது தமிழக அரசின் நிதி துணை காரணமாக 7500 என்ற ஊதிய நிர்ணயம் செய்து கொள்கை முடிவு கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்பொழுது நீதிபதிகள் இவ்வாறு உறுதி கொடுக்க முடியாத நிலையில் மக்களால் பணியாளர்களுக்கு ஒரு நிரந்தரவு மேற்கொள்ள வேண்டும். ஒரு அரசு பதவிக்கு வரும் பொழுது பணி வழங்குகிறது. மற்றொரு அரசு பதவிக்கு வரும் பொழுது அவர்களின் பணியை பறிக்கிறது. இந்த நடவடிக்கை மக்கள் நல பணியாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை அல்லவா? என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில தமிழக அரசின் நிறைந்த தீர்வு காண வேண்டுமென நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அப்பொழுது குறுக்கிட்ட பணியை ஏற்ற மக்களான பணியாளர் தரப்பு வழக்கறிஞர் முந்தைய அரசு எடுத்த நடவடிக்கை மக்களவை பணியாளர் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு வேலை வழங்கியுள்ளது. எனவே தான் பெரும்பாலான பணியாளர்கள் பணியில் சேர்ந்தனர் என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள் இந்த பணியாளர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இது தொடர்பான நிரந்தரமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு விளக்கம் அளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் மக்கள் நல பணியாளர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிப்பதாகவும், இதன் காரணமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மக்கள் பணியாளர்கள் நிரந்தரமாக பணியமர்த்தும் தொடர்பாக தமிழக அரசு கருத்து மற்றும் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

permanent solution should be found in the issue of public welfare workers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->