தி கேரளா ஸ்டோரிக்கு தமிழக அரசு மறைமுக தடை..!! உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்..!!
Petition filed in SC for TNGovt Indirect ban on the kerala story
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்தில் நிலவும் மறைமுக தடையை நீக்க கோரியும், தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்துக்கு தடை விதித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த தடைக்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் சான்றளித்த பிறகு, மாநில அரசுகள் தடை விதிக்க அதிகாரம் இல்லை. மாநில அரசுகள் தடை விதிக்க சட்டம் ஒழுங்கை காரணம் காட்ட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து திரைப்படத்தை தமிழக அரசு மறைமுகமாக தடை செய்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ரிட் மனுவில் படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Petition filed in SC for TNGovt Indirect ban on the kerala story