பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்பும் திருமாவளவன், சீமான் - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோவை, சேலம், உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப முயலும் திருமாவளவன் மற்றும் சீமானை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து, புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எச்.ராஜா தெரிவித்ததாவது, "தமிழகத்தில் பயங்கரவாதிகள், தேச விரோதிகள், வன்முறைவாதிகள் தைரியமாகவும், துணிச்சலாகவும் இருப்பதற்கு திருமாவளவன், சீமான் போன்ற தீய சக்திகள் தான் காரணம். 

இவர்களெல்லாம் அரசியலில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள். தற்போது, கோவையில் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதற்கு காரணம், காவல் நிலையத்திற்கு எதிரே எஸ்.டி.பி.ஐ, மற்றும் பி.எப்.ஐ போராட்டம் நடத்தும் போது அவர்களுடன் இருப்பது விடுதலை சிறுத்தைகள். விடுதலை சிறுத்தைகளுக்கும், எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐக்கும் சிறிதளவு கூட வித்தியாசம் இல்லை. 

எனவே, தமிழக அரசு அரசியல் ரீதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொய் செய்திகளை பரப்பும் திருமாவளவனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர்களை வைத்து கடலூரில் கூட்டம் போட்டவர் தான் சீமான். அவரும் நாட்டுக்கு விரோதமானவர் தான். அவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol bomb problam h.raja press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->