மக்கள் அழுகையிலும் பாஜக அரசியல் செய்கிறது! மத்திய அமைச்சர் அறிவில்லாதவர் போல் பேசுகிறார்! விளாசிய பினராயி விஜயன்! - Seithipunal
Seithipunal


வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டகை, சூரல்மலை ஆகிய பகுதிகளின் நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நிலச்சரிவில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கி உள்ளது. நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டோர் வீடுகளை இழந்தோர் உள்ளிட்டவர்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.

நிலச்சரிவில் 2000க்கும் மேற்பட்டோர் வெயில் மழை ஆகியவற்றை பொருட்படுத்தாமல் பெரும் சிரமத்திற்கும் இடையே பல்வேறு பகுதிகளில் தினமும் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்திற்கு உதவியாக பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிலசரிவு அபாயம் நிறைந்த வயநாட்டு பகுதியில் சட்டவிரோதமாக கேரள அரசு குடியேற்றியதாக  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் விமர்சனம் செய்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அமைச்சர் பூபேந்தர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. கேரளாவில் மலைப்பகுதியை பற்றி சிறுதளவு அறிவு, புரிதலும் உள்ளவர்கள் கூட அங்கு வசிக்கும் மக்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூற மாட்டார்கள்.

வயநாடு நிலசரிவு தொடர்பாக கேரளா அரசுக்கு எதிராக கட்டுரைகளை எழுதுமாறு மத்திய அரசு விஞ்ஞானிகளை நிர்பந்தம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. வயநாடு நிலச்சரிவு விவகாரத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pinarayi Vijayan says central government is playing politics in Wayanad landslide issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->