ஹரியானாவில் அதிர்ச்சி: 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிளம்பர்.! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பிளம்பரை போலீசார் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பூங்காவில் 15 வயதுடைய சிறுமிக்கும், 33 வயதுடைய பிளம்பர் முகமது ஷதாப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சிறுமியிடம் முகமது ஷதாப், தனது பெயரை அருமென் என்று கூறி பழகி வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி போபால் நகருக்கு கடத்திச் சென்று, சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் ராஜேந்திரா பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் போபால் நகரில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போபால் ரயில் நிலையத்தில் சிறுமியை மீட்ட போலீசார், முகமது ஷதாப்பை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமியை கடத்திச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷதாப், நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plumber arrested for kidnapping and raping 15 year old girl in haryana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->