தெலுங்கானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி.! பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் உள்ள மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் நேற்று இரவு திடீரென வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் தீ பிடித்துள்ளது. இந்த தீயானது கொழுந்துவிட்டு எரிந்து அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்கு பரவியது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட கடும் புகை மூட்டம் காரணமாக விடுதியின் முதல் 2 தளங்களில் தங்கியிருந்த 8 பேர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, இழப்பீடு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM announced compansation for 8 killed in fire accident in Telangana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->