நாள் குறிச்சாச்சு! மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்ததும் நம்பிக்கை வாக்கெடுப்பு! பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி தலைமையில் அமையுள்ள புதிய மத்திய அரசின் மீது வருகின்ற 21 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

மேலும் பாஜக தலைமையிலான இந்த மத்திய அரசிற்கு சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் 10 பேர் ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில், வருகின்ற எட்டாம் தேதி அல்லது ஒன்பதாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்பு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதன்படி, ஜூன் 17ஆம் தேதி புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிகளின் பதவி பிரமாணம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடிய இடைக்கால சபாநாயகர் அல்லது நிரந்தர சபாநாயகர் யார் என்று கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இதற்கிடையே, வருகின்ற 21ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அமையுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi 3 point O Govt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->