சுரேஷ் கோபி இல்ல திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
PM Modi attend Suresh gopi daughter wedding
மலையாள திரை உலகில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. இவர் ஆக்சன் ஹீரோவாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
65 வயதாகும் சுரேஷ் கோபி கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சுரேஷ் கோபியின் மகளான பாக்யாவிற்கு தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருடன் வருகின்ற 17ஆம் தேதி கேரளாவின் புகழ்பெற்ற இந்து கோவிலான குருவாயூரப்பன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரம் கிரீன் பீல்ட் மைதானத்தில் வருகின்ற 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சுரேஷ் கோபி தங்களது இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் வைத்தார்.
இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வருகை தர உள்ளார். அதற்கு முன்னதாக பிரதமர் மோடி காலை 8 மணி அளவில் குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கொச்சி செல்ல உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
PM Modi attend Suresh gopi daughter wedding