வடகிழக்கு மாநிலங்களின் முதல் வந்தே பாரத் ரயில்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலங்களின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அசாமின் குவஹாத்தி மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் இந்த ரயில் 411 கிமீ தூரத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடக்கும்.

வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில் அசாமின் கம்ரூப் பெருநகரம், கம்ரூப் ரூரல், நல்பாரி, பார்பெட்டா, சிராங், கோக்ரஜார் மாவட்டங்கள் மற்றும் வடக்கு வங்காளத்தின் அலிபுர்துவார், நியூ கூச்பெஹார் மற்றும் ஜல்பைகுரி மாவட்டம் வழியாக செல்லும்.

மேலும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்துடனும், வசதியுடனும் பயணிக்க வழிவகை செய்யும் என்றும், இது இப்பகுதியில் சுற்றுலாவையும் மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 181 கிலோமீட்டம் தூரம் கொண்ட மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm Modi flags off northeast first Vande Bharat Express train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->