ஜனாதிபதி திரௌபதி முர்மு 65-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து - Seithipunal
Seithipunal


ஜனாதிபதி திரௌபதி முர்முவின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1958ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி ஒடிசாவின் மயூர்பஞ்சில் உள்ள உபர்பேடா கிராமத்தில் பிறந்தார் திரௌபதி முர்மு. இவர் கடந்த ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது 65-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில், "ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஞானம், கண்ணியம் மற்றும் நமது மக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக விளங்கும் அவர், தேசத்தின் முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகப் போற்றப்படுகிறார். அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi greets President Droupadi Murmu on her 65th birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->