விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி ரோட்ஷோ; ஆந்திரா முதல்வர் துணை முதல்வர் உற்சாக வரவேற்பு..! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி இன்று மாலை விசாகப்பட்டினம் வந்தார். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக  விமானம் மூலம் வந்த அவரை, ஆளுநர் அப்துல் நசீர், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் மூவரும் வாகனத்தில் ஏறி விழா நடைபெறும் இடத்திற்கு சென்றனர். இருபுறமும் மக்கள் கூடி நின்று பிரதமர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை வரவேற்றனர். மக்களை நோக்கி கையசைத்தபடி சென்ற ரோடு ஷோ சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் வரை நடைபெற்றது.

பிரதமர் மோடி அனக்காபள்ளி மாவட்டம், அச்சுதாபுரம் அருகே ரூ.1.85 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தை தொடங்கி வைக்கிறார்.

அத்துடன், ரூ.19.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட 06 சாலைகள் மற்றும் ரெயில் பாதை பாதை அமைப்பதற்கான திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆந்திர பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi holds roadshow with CM Chandrababu Naidu Deputy CM Pawan Kalyan in Vishakhapatnam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->