"இந்தியா-நேபாளம்" இடையே சரக்கு ரயில்... கொடியசைத்து தொடங்கி வைத்தனர் இரு நாட்டு பிரதமர்கள்...! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா நான்கு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இதையடுத்து இன்று இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான சரக்கு ரெயில் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா ஆகிய இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இது பீகாரில் உள்ள பத்னாஹாவில் இருந்து நேபாள கஸ்டம் யார்டுக்கு செல்லும்.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் ருபைதிஹா மற்றும் நேபாளத்தின் நேபால்கஞ்ச் ஆகிய இடங்களில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளை பிரதமர் மோடி மற்றும் தஹால் கூட்டாக திறந்து வைத்தனர். மேலும் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே உள்ள மோதிஹாரி-அம்லெக்குஞ்ச் எண்ணெய்க் குழாயின் இரண்டாம் கட்டத்துக்கு இரு தலைவர்களும் அடிக்கல் நாட்டினர். 

இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே உள்கட்டமைப்பு மேம்பாடு, இணைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்களுக்கான பரிமாற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகள் இடையேயான மதம் மற்றும் கலாசார உறவுகள் மிக பழமையானது மற்றும் வலிமையானது. இதனை இன்னும் வலுப்படுத்தும் வகையில், ராமாயண பாதை தொடர்புடைய திட்டங்களை விரைவுப்படுத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Nepal PM together flag off cargo train from india to nepal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->