4 பேர் பலி: பிரதமர் மோடிதான் பொறுப்பு - காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம்: இன்று மதியம் பயணிகள் ரெயில் ஒரு திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகிய நிலையில், இந்த விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சரும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம், கோண்டா பகுதியில் சண்டிகரிலிருந்து திப்ரூகர் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் நான்கு பெட்டிகள் கவிழ்ந்ததால், நான்கு பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. 

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரயில் பாதுகாப்பில் கவனம் செலுத்தாததால் தான், ரயிலில் பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்பு சீர்குலைந்து உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் செய்தி குறிப்பில், பிரதமர் மோடி எப்படி முறையாக ரயில் பாதுகாப்பு சீர் குலைத்தார் என்பதற்கு இந்த ரயில் விபத்து மற்றும் ஒரு உதாரணம்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயம் அடைந்தவர்களுடன் இருக்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சீல்டா-அகர்தலா கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் பலியாகினர். தானியங்கி சமிச்சை தோல்வி செயல்பாடு, நிர்வகிப்பதில் பல குறைபாடுகள் மற்றும் லோகோ பைலட் ரயில் மேலாளர் உடனான வாக்கி-டாக்கி போன்ற முக்கியமான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கவில்லை என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் ரயில்வே துறை அமைச்சர் தங்களின் சுய விளம்பரத்திற்காக இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். 

மேலும் ரயில்வே துறையில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும், விபத்துகளை தடுப்பதற்கும் நாடு முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் "கவாச்" எதிர்ப்பு மோதல் அமைப்பை விரைவாக நிறுவிட வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Railway Minister train accident Malligarjuna Kharge 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->