சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை.. பிரதமர் மோடி.. பாராட்டி ட்வீட்.!
pm modi sanskrit wishes about cricket commentary
தற்போது தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய கிரிக்கெட் போட்டிகளை அனைத்து மொழிகளிலும் நேரலையில் வர்ணனை செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. இத்தகைய நிலையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு பகுதியில் தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், அவர்கள் கிரிக்கெட்டில் சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்து இருக்கின்றார். பெங்களூருவின் கிரிநகர் பகுதியில் வசித்து வருகின்ற உப்பள்ளியை சேர்ந்த லட்சுமி நாராயண் என்ற இளைஞர் வீட்டிற்கு அருகில் மைதானத்தில் சில இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.
லட்சுமி நாராயண் அந்த விளையாட்டை சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்து வீடியோ எடுத்து அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்திலும் வெளியிட்டு இருக்கின்றார். இத்தகைய நிலையில், பிரதமர் மோடி இந்த வீடியோவை பார்த்துவிட்டு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்து இருக்கின்றார்.
அவர் கிரிக்கெட்டை சமஸ்கிருதத்தில் வர்ணனை செய்ததை பார்க்க மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொள்பவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
pm modi sanskrit wishes about cricket commentary