'' I.N.D.I '' கூட்டணி இதைத்தான் விரும்புகிறது... - பிரதமர் மோடி கடும் தாக்கு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும் வருகின்ற 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்குவங்காளம், புருலியா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர், வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக உங்களிடம் ஆசி பெற வந்துள்ளேன். தேர்தலில் வெற்றி பெற இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்துகின்றனர். 

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க இந்த கூட்டணி விரும்புகிறது. மேற்கு வங்காள பெண்கள் தங்களது வாக்குகள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுவார்கள். 

மேற்கு வங்கத்தில் உள்ள அகதிகள், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் விரைவில் இந்திய குடியுரிமையை பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi says INDI alliance wants religion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->