குறுக்குவழிகளை கடைபிடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டின் மிகப்பெரிய எதிரிகள் - பிரதமர் மோடி
PM Modi says Politicians who stick to shortcuts are the country biggest enemies
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, 2017ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் ரூ.1,575 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை இன்று மக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனை முன்னிட்டு இன்று நடந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராவ்சாகேப் தன்வே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குறுக்குவழி அரசியலுக்கு எதிராக நான் எச்சரிக்க விடுக்க விரும்புகிறேன். குறுக்குவழிகளை கடைப்பிடிக்கும் அரசியல் தலைவர்கள் நாட்டின் மிகப்பெரிய எதிரிகள்.
மேலும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் கொண்டவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PM Modi says Politicians who stick to shortcuts are the country biggest enemies