வாரணாசியில் வரும் 13ந்தேதி‌ கங்கா விலாஸ் சொகுசு கப்பலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


கங்கா விலாஸ் சொகுசு கப்பலின் பயணத்தை பிரதமர் மோடி ஜனவரி 13ஆம் தேதி வாரணாசியில் கொடியசத்து துவக்கி வைக்க உள்ளார்.

வாரணாசியில் புறப்பட்டு பாட்னா, கொல்கத்தா வழியாக வங்களாதேசம் தலைநகர் தாக்கா சென்றடையும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு கப்பலின் பயணம் அசாமின் திப்ரூகார் நகரில் முடிவடையும். இந்த கப்பலில் இசை, கலாச்சார நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, திறந்தவெளி கண்காணிப்பு தளம், தனிப்பயனாக்கப்பட்ட சேவை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலக பாரம்பரிய தளங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் கப்பல் நிறுத்தப்படும். இது சுந்தரவன டெல்டா மற்றும் காசிரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் வழியாகவும் செல்லும் இந்த கப்பல் சுமார் 4000 கிலோமீட்டர் தூரத்தை 50 நாட்களில் கடக்கும்.

மேலும் வெளிநாட்டவர் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கப்பல் மற்றும் அதன் பயணம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm modi to launch ganga vilas cruise in Varanasi on jan 13


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->