11-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி..பாஜகவினர் உற்சாகம்!
PM Modi to visit Tamil Nadu on May 11 BJP is excited
பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி ராமேசுவரம் வருகிறார்.அப்போது பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தை அவர் திறந்துவைக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய ரெயில் பாலம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் , பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தைப்பூச தினமான 11-ந் தேதியோ அல்லது அதற்கு முந்தைய நாளோ இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டதுமேலும் புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார் என்றும் ரெயில்வே கட்டுமான நிறுவன உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகின.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி ராமேசுவரம் வருகிறார் என்றும் பின்னர் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகிறார் என்றும் அங்கிருந்து கப்பலில் சென்று பழைய பாலம் மற்றும் புதிய பாலத்தை பார்வையிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் புதிய ரெயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அந்த ரெயிலில் பயணம் செய்யும் வகையிலும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது மேலும், ரூ. 15,000 கோடிக்கான முடிவுற்ற திட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் வருகையையொட்டி அவரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஓரிரு நாட்களில் மண்டபம், ராமேசுவரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
PM Modi to visit Tamil Nadu on May 11 BJP is excited