இலங்கை முன்னணி வீரர் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Sri Lankas top batsman announces retirement Fans are shocked
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஆன திமுத் கருணாரத்னேஅறிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஆன திமுத் கருணாரத்னே.இலங்கை அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதம் உள்பட 7172 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இவர் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 1316 ரன்கள் குவித்துள்ளார்.
36 வயதாகும் திமுத் கருணாரத்னே தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 6-ம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிதான் தனக்கு கடைசி சர்வதேச போட்டி என்றும் திமுத் கருணாரத்னே அறிவித்துள்ளார்.
மேலும் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிதான் அவரது 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அவர் எடுத்துள்ள முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Sri Lankas top batsman announces retirement Fans are shocked