டேராடூன் டூ டெல்லி வந்தே பாரத் ரயில்.. கொடியசைத்து இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...!
Pm modi today inaugurate dehradun Delhi Vande Bharat express train
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி செல்லும் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கூடிய இந்த வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயில் டேராடூனுக்கும், டெல்லிக்கும் இடையே ஹரித்வார், ரூர்க்கி, சஹாரன்பூர், முசாபர்நகர் மற்றும் மீரட் ஆகிய ஐந்து இடங்களில் நின்று செல்லும் என்று ரெயில்வே வாரியத்தின் இணை இயக்குநர் விவேக் குமார் சிசின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கிலோமீட்டராக இருக்கும். அதே நேரத்தில், சராசரி வேகம் 63.41 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 314 கிமீ தூரத்தை நான்கு மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pm modi today inaugurate dehradun Delhi Vande Bharat express train