கத்தாருக்கு விரையும் பிரதமர் மோடி - திடீர் பயணத்திற்கு காரணம் என்ன?
pm modi travel to qatar
அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து மத கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
பின்னர், மோடி அபுதாபியில் உள்ள அரங்கில் ஐக்கிய அரபு அமீரகம் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இந்த ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு அன்றைய தினமே பிரதமர் மோடி கத்தார் செல்கிறார்.
அங்கு அந்நாட்டு அதிபர் ஷேக் தமீம் பின் அகமது அல்தானியை சந்தித்து, இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கின்றனர்.
இதற்கு முன்னதாக, கத்தாரில் உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் அரசு விடுதலை செய்துள்ளது. இதில், 7 பேர் இன்று இந்தியா வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.