அதிகளவில் வாக்களித்து சாதனை படைக்க... வடகிழக்கு மக்களிடம் மோடி வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மேகாலயா மற்றும் நாகாலந்து மாநிலங்களிலும் தலா 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் நாகாலந்தில் நடைபெறும் தேர்தலில் 183 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள். அவற்றில், அக்குலுட்டோ தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ கினிமி போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்த தேர்தலுக்காக 2,291 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதில் 196 வாக்குச்சாவடிகளில் பெண்களும், 10 இடத்தில் மாற்றுத்திறனாளிகளும் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மேகாலயா மாநிலத்தில் 59 இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அதில், ஷோகியோங் தொகுதி வேட்பாளர் இறந்ததனால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், மேகாலயா மற்றும் நாகாலாந்து மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து சாதனை படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm Modi urges the people of the nagaland meghalaya to vote in large numbers and create a record


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->