பல ஆண்டுகள் நினைவில் நிற்கும் ஒரு பாடலாக "நாட்டு நாட்டு" பாடல் அமையும் - பிரதமர் மோடி டுவீட்.!
PM modi wishes to nattu nattu song and the elephant whispers film for won oscar award
இன்று அமெரிக்கா நாட்டில் ஹாலிவுட் பகுதியில் உள்ள டால்பி தியேட்டரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியை இந்திய நடிகை தீபிகா படுகோனே தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பல நாட்டின் திரைபடங்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல பிரிவுகளின் கீழ் விருதுகளை தட்டி தூக்கிச் செல்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் "நாட்டு நாட்டு" பாடலும், சிறந்த ஆவணப்படப் பிரிவில் இந்தியாவின் "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" படமும் விருதை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்த இரண்டு படக்குழுவினர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது எதிர்பார்த்ததுதான். நாட்டு நாட்டு பாடல் உலகளவில் புகழ் பெற்றுள்ளது.
இந்த பாடல் பல ஆண்டுகள் நினைவில் நிற்கும் பாடலாக இருக்கும். இசையமைப்பாளர் கீரவாணி, சந்திரபோஸ் மற்றும் படக்குழுவினர் உள்பட அனைவருக்கும் என்னுடைய பாரட்டுக்கள்” என்றுத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவை பாராட்டி அவர் தெரிவித்துள்ளதாவது, "இந்தப் படம் நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை அற்புதமாக எடுத்து காட்டுகிறது. கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங் மற்றும் படக்குழுவினர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
PM modi wishes to nattu nattu song and the elephant whispers film for won oscar award