புத்தாண்டு கொண்டாட்டத்தில் காவல்துறை தடியடி.. தலை தெறிக்க ஓடிய இளைஞர்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் நேற்று இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டத்தில் மக்கள் அதிக அளவில் கூடியதால் சமாளிக்க முடியாமல் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்துள்ளனர். புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மக்கள் கூடியிருந்தனர்.

அதிக அளவில் மக்கள் கூடியதை தொடர்ந்து அதையும் மீறி வருபவர்களை போலீசார் தடியடி நடத்தி துரத்தி விட்டனர். புதுச்சேரி காந்தி சிலை அருகே ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு அதிக அளவில் கூட்டம் கூட கூடியதால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் உள்ளூர் பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர். 

இதன் காரணமாக சில இளைஞர்கள் தரையில் அமர்ந்து பாட்டு போடும்படி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் காந்தி சிலை அருகே சிறிது நேரம் பதட்டமான சூழல் உண்டானது. கடற்கரை சாலை பகுதியில் ஒரே நேரத்தில் 60,000 மேற்பட்டோர் குவிந்ததால் செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police baton in Puducherry New Year celebrations


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->