சிறுமியைக் கடத்தி கூட்டு பாலியல் தொல்லை - குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியைச் சேர்ந்த பதின்மூன்று வயது சிறுமி, தனது சகோதரனுக்கு உணவு கொடுத்துவிட்டு பள்ளியில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது, மூன்று நபர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை கடத்தி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன் பின்னர், அவர்கள் அந்த சிறுமியை கடுமையாக தாக்கிவிட்டு, குப்பை தொட்டிக்கு அருகில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாய்க்கு தகவல் கிடைத்த நிலையில், அவர் சம்பவ இடத்திற்குச் சென்று தனது மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று நபர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும், போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police case file on three youths for harassment in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->