மத்திய அமைச்சர் வீட்டில் ரத்தக்கறையால் பரபரப்பு - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கேரளாவைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சர் முரளீதரன். மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சராக பதவி வகித்து வரும் இவர் டெல்லியில் இருந்து கேரளாவை நோக்கி வரும்போது திருவனந்தபுரம் கொச்சுளூர் பகுதியில் உள்ள வீட்டில் தங்குவது வழக்கம். 

அமைச்சர் டெல்லியில் இருக்கும் போது இந்த வீடு பூட்டியே இருக்கும். ஆனால், வீட்டில் வேலை செய்யும் பெண், காலையில் வந்து வீட்டை பெருக்கி சுத்தம் செய்து செல்வார். வழக்கம் போல், நேற்று வேலைக்கார பெண் வீட்டிற்கு வந்தார். 

அங்கு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து, கார் நிறுத்தும் பகுதி மற்றும் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டு போன்றவற்றில் ரத்த கறைகள் இருந்துள்ளது. இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் உதவியாளருக்கு தகவல் தெரிவித்தார். 

அவர் உடனே போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.அதன் பின்னர் அங்கு உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

மத்திய அமைச்சர் வீட்டில் இல்லாத நேரத்தில் மர்மநபர்கள் யாரவது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்களா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மத்திய அமைச்சர் வீட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation for blood stain in union minister muralidharan home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->