மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கொலை மிரட்டல் : போதை ஆசாமியை வலைவீசி தேடும் போலீசார்.!! - Seithipunal
Seithipunal


மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கொலை மிரட்டல் : போதை ஆசாமியை வலைவீசி தேடும் போலீசார்.!!

நேற்று காலை டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர் தனது பெயர் சுதீர் சர்மா என்றும், தான் ஒரு தச்சு தொழிலாளி என்றும் தெரிவித்தார்.

அதன் பின்னர் அந்த நபர் ரூ.10 கோடி தராவிட்டால் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமாரை கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்துவிட்டு உடனே அழைப்பை துண்டித்து விட்டார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், மீண்டும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அந்த நபர் இந்த முறை ரூ.2 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கொலை செய்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் அழைப்பு விடுத்து கொலை மிரட்டல் விட்ட , அந்த நபரின் முகவரியை போலீசார் கண்டுபிடித்து உடனடியாக அங்கு சென்றனர். ஆனால் அங்கு அந்த நபர்  இல்லை. அதன் பின்னர் போலீசார் வீட்டில் இருந்த அவரது மகனிடம் விசாரணை செய்தனர்.

அப்போது அவர், "தனது தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட போது அவர் அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார், தலைமறைவான அந்த போதை ஆசாமியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation if man kill thread to modi and amithsha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->