சட்டவிரோதமாக செயல்பட்ட விராட் கோலி ஓட்டல்! ஒன்8 கம்யூன் மேலாளர் மீது காவல்துறை வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ஹோட்டல் மீது காவல்துறையின் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். அந்தவகையில், பெங்களூரில் ஒன்8 கம்யூன் என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

இந்த ஓட்டல் இரவு 1 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த ஓட்டலின் பார் நல்லிரவு 1 மணியை கடந்தும் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒன்8 கம்யூன் மேலாளர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்8 கம்யூன் மட்டுமின்றி பெங்களூர் முழுக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதை விட அதிக நேரம் சட்டம் விரோதமாக இயங்கி  வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதேபோல் ஒன்8 கம்யூன் நிறுவனத்தில் செயல்படும் பார்கள் நிர்ணயித்த நேரத்தை விட அதிக நேரம் செயல்படுவதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு துவங்கப்பட்ட ஒன் 8 கம்யூன் பெங்களூர் மட்டுமே நாடு முழுக்க பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police registered a case against the manager of One8 Commune who acted illegally


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->