காவல் நிலையத்தில் 'துப்பாக்கிச் சூடு': பாஜக எம்.எல்.ஏ அதிரடி கைது!
police station Shooting BJP MLA arrested
மும்பை, அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பாஜக எம்எல்ஏ உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட்டுக்கும் சிவசேனா முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவல் நிலைய ஆய்வாளர் அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையின் போது பாஜக எம்எல்ஏ துப்பாக்கி சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police station Shooting BJP MLA arrested