அரசியல் கட்சிகள் நடத்தை விதிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்; லோக்சபா சபாநாயகர் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


பீஹார் தலைநகர் பாட்னாவில், 85வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது.  இரு நாட்களாக நடந்தது மாநாட்டின் நிறைவு அமர்வில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசினார். 

அப்போது அவர், சட்டசபைகளின் கண்ணியத்தை நிலைநிறுத்த, அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். தங்களின் எம்.எல்.ஏ.,க்களுக்கான நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

கடந்த 1947 முதல் இன்று வரையிலான பாராளுமன்ற விவாதங்கள், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட, 22 மொழிகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதே போல, மாநில சட்ட சபைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Political parties should cooperate with the code of conduct


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->