காபி ஷாப்போகிற பெண்களே உஷார்! கழிவறையில் ரகசிய கேமரா! வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


பெங்களூரில் பிரபல காபி ஷாப்பில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் நகரில் பிரபலமாக இறங்கி வரும் காபி ஷாப் கிளை உள்ளது. இந்த காபி ஷாப் இருக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் அந்த காபி ஷாப்பில் பெண்கள் கழிவறை போன் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் BEL அவரோடு பகுதியில் உள்ள தேர்ட் வெவ் காபி ஷாப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் உள்ள குப்பை தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்த செல்போனை பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏரோபிலேன் மோடில் இருந்த அந்த போனில் ஆன் செய்யப்பட்டிருந்த கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை பதிவிட்டதை அடுத்து போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த செல்போன் அந்த காபி ஷாப்பில் வேலை செய்யும் ஊழியர் உடையது என்று முதல் கட்ட விசாரணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை காபி ஷாப் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காபி ஷாப் நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். கழிவறையில் கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

popular coffee shop in Bangalore has reportedly installed a secret camera in the women washroom


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->