#Pragyan100 || நிலவில் சதம் அடித்த பிரக்யான் ரோவர்! இஸ்ரோ கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தி இருந்தது. சுமார் 40 நாட்கள் பயணத்திட்டத்தின் அனுப்பப்பட்ட சந்திராயன்-3ல் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6:03 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து தரையிறங்கிய பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தை அலசி ஆராய்ந்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் கனிமங்கள் இருப்பதை உறுதி செய்த பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 

கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்கிய விக்ரம் ரோவர் தற்போது வரை நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டருக்கு மேல் பயணம் செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் எஸ் சமூக வலைதள பக்கத்தில் "பிரக்யான் 100, சந்திரனுக்கு மேல் பிரக்யான் ரோவர் 100 மீட்டருக்கு மேல் கடந்து தனது பயணத்தை தொடர்கிறது" என பதிவிடப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pragyan Rover traversed over 100 meters and continuing on moon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->