தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர் பிறந்த தினம் இன்று.!!
prakash vir shastri birthday 2021
பிரகாஷ் வீர் சாஸ்திரி :
தலைசிறந்த சமஸ்கிருத அறிஞர், பேச்சாளர், ஆரிய சமாஜ தலைவரான பண்டிட் பிரகாஷ் வீர் சாஸ்திரி 1923ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.
இவர் 'என்னைவிட சிறந்த பேச்சாளர்" என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் பாராட்டு பெற்றவர். சுவாமி தயானந்தரின் கருத்துக்கள், ஆரிய சமாஜ கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
இவர்தான் ஐ.நா.சபையில் இந்தியில் பேசிய முதல் இந்தியர். இவர் சிறந்த கவிஞரும் கூட. மக்களவை தேர்தலில் 2 முறை சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக ஆரிய சமாஜ வளர்ச்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார்.
உத்தரப் பிரதேசத்தின் ஆரிய பிரதிநிதிகள் சபை தலைவராகப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் சேவை செய்து வந்தார். கட்டாய மத மாற்றத்தை தடுக்க மத பாதுகாப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 1960ஆம் ஆண்டு முன்மொழிந்தார்.
அபார பேச்சாற்றல் கொண்டவரும், தலைசிறந்த சமஸ்கிருத அறிஞருமான பிரகாஷ் வீர் சாஸ்திரி, 1977ஆம் ஆண்டு மறைந்தார். 2003ஆம் ஆண்டு துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி இவரது நாடாளுமன்ற உரைகளின் ஒரு பகுதியை புத்தகமாக வெளியிட்டார்.
English Summary
prakash vir shastri birthday 2021