மோடி ஆட்சியில் கருப்பு பணமும் கடனும் அதிகரிப்பு! சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷன் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கு எதிராகவும் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராகவும் சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். பாஜக தொடர்ந்து ஆட்சி அமைத்த குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு முந்தைய பொருளாதார நிலையம் தற்போது ஒரு பொருளாதார நிலையும் ஒப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மோடிக்கு முன்பு டாலர் விலை ரூ.62.33 ஆகவும், இந்தியாவின் கடன் 56 லட்சம் கோடியாகவும், ஸ்விஸ் வங்கியில் கருப்பு பணம் 7000 கோடியாகவும் உலக பட்டினியில் இந்தியா 55 வது இடத்திலும் இருந்துள்ளது.

ஆனால் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு 2022ல் டாலர் விலை ரூ.81.47 ஆகவும், இந்தியாவின் கடன் 156 லட்சம் கோடியாகவும், சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணம் ரூ.30,000 கோடியாகவும், உலக பட்டினியில் இந்தியா 107 வது இடத்திலும் இருப்பதாக விமர்சித்துள்ளார். அரசியல் விமர்சகர் பிரசாந்த் பூஷணின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prasanth bhushan criticized money rate increased under modi govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->