ராமர் கோவில் கும்பாபிஷேகம் - பிரபலங்களுக்கு "மஹாபிரசாதம்" வழங்க ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்ட செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் முக்கிய பிரமுகர்களுக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் 'மஹாபிரசாதம்' வழங்கப்படுகிறது. 
இதற்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசாத பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

அந்த பாக்கெட்டில் நெய், 5 வகையான உலர் பழங்கள், சர்க்கரை, உளுந்து மாவு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட 2 லட்டுகள், சரயு நதி நீர், அட்சதை, வெற்றிலை தட்டு உள்ளிட்டவை இருக்கும். அந்த பாக்கெட்டுகள் அனைத்தும் அறக்கட்டளையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. 

இந்தப் பிரசாதம் விழாவிற்கு பிறகு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு, கோவில் வளாகத்தில் உணவு ஏற்பாடுகளை அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களுக்கு பருப்பு வகைகள் மற்றும் தினை சார்ந்த உணவுகளுடன் சுத்தமான சைவ உணவு வழங்கப்படும். இதனை வாரணாசி மற்றும் டெல்லியைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் தயார் செய்வார்கள். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prasatham provide to celebrities for ramar temple kumbabhishegam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->