மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா - குடியரசுத்தலைவர் முர்மு பங்கேற்பு.!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மாற்றுத் திறனாளிகள் திம்மம்மா இன்று அவர்களை போற்றுவதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் தலைமை வகிக்கிறார். மேலும் இந்த விழாவில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, ஏ. நாராயணசாமி மற்றும் பிரதிமா பௌமிக் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளை போற்றும் வகையில், சிறப்பாக  பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு விருதுகளை வழங்க உள்ளார். அதுமட்டுமல்லாமல், மாற்று திறனாளி துறையில் சிறப்பாக செயலாற்றிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் பல்வேறு விதமான விருதுகளை வழங்க உள்ளார்.

கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் பதினான்கு பிரிவுகளின் கீழ் இன்று வழங்கப்படவுள்ளன. இதற்காக 2021 ஆம் ஆண்டிற்கு 844 விண்ணப்பங்களும், 2022 ஆம் ஆண்டிற்கு 366 விண்ணப்பங்கள் என்று மொத்தம் 1210 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இந்த விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்த பின்னர் விருது பெறுபவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president Draubathi murmu attend the disabled person awards ceremony fuction


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->