லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசுத்தலைவர் முர்மு, பிரதமர் மோடி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசுத்தலைவர் முர்மு, பிரதமர் மோடி இரங்கல்.!

லடாக்கில் உள்ள லே மாவட்டத்தில் நேற்று ராணுவ வீரர்களுடன் 3 வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனங்கள் தெற்கு லடாக்கின் நியோமா அருகே உள்ள கெரே பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஒரு வாகனம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் அந்த வாகனத்தில் இருந்த இருந்த பத்து வீரர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து போலீசார் காயமடைந்த வீரர்களை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர்களில் ஒன்பது பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், லடாக்கில் ராணுவ வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள செய்தியில், "லடாக் விபத்து குறித்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு தேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார். 

இதேபோல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், "லே அருகே நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம்.

தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய செழுமையான சேவை எப்போதும் நினைவுகூரப்படும். உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" என்று பதிவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president murmu and PM modi condoles to army soldiers died in ladak


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->