4 நாள் சுற்றுப்பயணம் - ஒடிசாவுக்கு வருகிறார் ஜனாதிபதி முர்மு.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒடிசாவில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதனையொட்டி ஒடிசாவில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை ஆளுநர் ரகுபர் தாஸ் மற்றும் முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஜி உள்ளிட்டோர் முறைப்படி வரவேற்றனர்.

இதையடுத்து குடியரசுத்தலைவர் முர்மு கடந்த 1936-ம் ஆண்டில், ஒடிசா தனி மாநிலம் உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்து பங்காற்றிய உத்கலமணி பண்டிட் கோபபந்து தாசின் 96-வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்ட பகுதியை சேர்ந்த முர்மு, பூரி நகரில் நாளை நடைபெற கூடிய ரத யாத்திரையில் பங்கேற்க உள்ளார். இதற்கு அடுத்த நாள், உதயகிரி குகை பகுதிக்கு சென்று பார்வையிடுகிறார். அன்றைய தினம், பிபுதி கனூங்கோ கலை மற்றும் கைவினை கல்லூரி மற்றும் உத்கல் கலாசார பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் உரையாடுகிறார்.

வருகிற 8-ந்தேதி, புவனேஸ்வர் அருகே ஹரிதமட கிராமத்தில் பிரம்ம குமாரிகளுக்கான தெய்வீக ஓய்வு மையம் மற்றும் நீடித்த வாழ்க்கைமுறைக்கான பிரசாரம் ஒன்றையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

9-ந்தேதி புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 13-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு அன்றைய தினமே டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president murmu four days tour in odisha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->