11 குழந்தைகளுக்கு தேசிய விருது வழங்கும் ஜனாதிபதி முர்மு.!
president murmu present national award to eleven childrens
நாட்டில் உள்ள குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக மத்திய அரசு, "பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்" என்ற விருதை வழங்குகிறது. இந்த விருது தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில், துணிச்சல், புதுமை, சமூக சேவை மற்றும் விளையாட்டு என்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து 11 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு "பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்" விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதினை நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை வழங்குகிறார். பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதக்கம் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசுடன் சான்றிதலும் வழங்கப்படுகிறது.
English Summary
president murmu present national award to eleven childrens