நாடாளுமன்றத் கூட்டத்தொடர் : பழைய கட்டிடத்தில் ஜனாதிபதி உரை - ஓம் பிர்லா தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது இயங்கி வரும் நாடாளுமன்ற கட்டிடம் 1927 இல் பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளரால் கட்டப்பட்டது. அதன் பின்னர் இந்த நாடாளுமன்ற கட்டிடம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றம் என்ற அந்தஸ்தை பெற்றது.

இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் செய்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

தற்போது, அதற்கான கட்டுமானப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதால், வருகிற 31-ந்தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். இருப்பினும், இந்த குடியரசுத் தலைவர் உரை பழைய கட்டிடத்தில் தான் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, "நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாட்டின் குடியரசுத் தலைவர் மாண்புமிகு திரவுபதி முர்மு, தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கு மத்தியில் உரையாற்றுவார்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president speach in old parliment house om birla information


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->