உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பல்.! கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று கங்கா விலாஸ் சொகுசு கப்பலின் பயணத்தை இன்று காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி கொடியசத்து துவங்கி வைத்தார்.

இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள ஐந்து மாநிலங்களில் உள்ள 27 நதிகள் வழியாக 3,200 கிமீ தூரம் பயணிக்கும் கங்கா விலாஸ் சொகுசு கப்பல் வாரணாசியில் புறப்பட்டு பாட்னா, கொல்கத்தா வழியாக பங்களாதேசம் தலைநகர் தாக்கா சென்றடையும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு கப்பலின் பயணம் அசாமின் திப்ரூகார் நகரில் முடிவடையும்.

மேலும் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் தொடங்கி வைத்து மற்றும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். 

இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கங்கை நதியில் உலகின் மிக நீண்டதூர பயண கப்பல் சேவை துவங்கியிருப்பது ஒரு முக்கிய தருணமாகும். ரூ.1000 கோடிக்கும் அதிகமான பல உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது கிழக்கு இந்தியாவில் வர்த்தகம், சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் என்றார்.

மேலும் கங்கா விலாஸ் சொகுசு கப்பலில் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிறைய விஷயங்கள் உள்ளன என்றும், இந்தியாவை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது, இதயத்திலிருந்து மட்டுமே அனுபவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi flagged off the world longest luxury river cruise ship


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->