பயங்கரவாதிகள் தப்ப முடியாது - பிரதமர் மோடி ஆவேசம்!
Prime Minister Modi has stated that terrorists will not escape
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
கடினமான சூழலில் இந்தியாவுடன் துணை நின்ற நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், தாக்குதல் நடத்தியவர்கள், சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவு தண்டனை வழங்கப்படும் என்றும், இந்தியாவின் தன்னம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம் என்றார்.
English Summary
Prime Minister Modi has stated that terrorists will not escape