நெருங்கும் சட்டசபை தேர்தல் - கூட்டணி கட்சி முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!
prime minister modi meet nda chief ministers
ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க முதலமைச்சர் நயாப் சிங் சைனி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த முதலமைச்சர்களான சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டே உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் அரியானா சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றது போல், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெறச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
"நல்ல ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது. எங்கள் கூட்டணி ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் உறுதியாக உள்ளது" என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
prime minister modi meet nda chief ministers