உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர்..! - Seithipunal
Seithipunal


​உலக செஸ் சாம்பியன் குகேஷை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதன்போது, குகேஷ், பிரதமர் மோடிக்கு தான் மற்றும் டிங் லிரேன் கையெழுத்திட்ட இறுதிப்போட்டியில் விளையாடிய செஸ் போர்டை நினைவு பரிசாக வழங்கியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 

இதன் மூலம் உலக செஸ் வரலாற்றில் இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை 18 வயதான குகேஷ் பெற்றார்.

இவருக்கு பரிசு கோப்பை மற்றும் பதக்கத்துடன் ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பிலும் அவருக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலக செஸ் சாம்பியன் குகேஷை, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சந்தித்த பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில், " செஸ் சாம்பியனும் இந்தியாவின் பெருமையுமான குகேஷ் உடன் எனக்கு சிறந்த தொடர்பு இருக்கிறது! சில வருடங்களாக அவருடன் நெருக்கமாகப் பழகி வருகிறேன், அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது உறுதியும் அர்ப்பணிப்பும்தான்.

அவரது தன்னம்பிக்கை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இளைய உலக செஸ் சாம்பியனாக வருவேன் என்று அவர் கூறிய ஒரு வீடியோவைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரது சொந்த முயற்சிகளால் இப்போது அந்த கணிப்பு நிறைவேறியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சாம்பியன் குகேஷுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள், பலரும் வாழ்த்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi personally called and praised World Chess Champion Kukesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->